ஆத்தூர்: அம்பாத்துரை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து பாளையங்கோட்டையை சேர்ந்த பெயிண்டர் பலி
Attur, Dindigul | Nov 23, 2025 திருநெல்வேலியில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் செந்தூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் பாளையங்கோட்டை டவுன் பகுதியை சேர்ந்த அன்புகாசிநாடார் மகன் புஷ்பராஜ் இவர் தனது சக வேலை ஆட்களுடன் பெயிண்டிங் வேலை செய்வதற்காக விழுப்புரம் செல்வதற்காக ரயிலில் முன்பதிவு இல்லா பெட்டியில் படியில் அமர்ந்து வந்து கொண்டிருந்தபோது திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை அருகே ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்