தாம்பரம்: பம்மல் ஈஸ்வரி நகரில் ₹2 கோடி மதிப்பீட்டில் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை - MLA பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பம்மல் ஈஸ்வரி நகர் பகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிதியிலிருந்து ₹2 கோடி மதிப்பில் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.