வேடசந்தூர்: கிழக்கு மாரம்பாடியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி விழுந்து விபத்து
வேடசந்தூர் ஒன்றியம் கிழக்கு மாரம்பாடியில் கடந்த 1997 ஆம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்பொழுது வரை பயன்பாட்டில் இருக்கும் இந்த தொட்டியின் தூண்கள் பழுதடைந்து இருந்தது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. ஆய்வு செய்த அதிகாரிகள் மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் திடீரென தொட்டி பெயர்ந்து கீழே விழுந்தது.