விருதுநகர்: விருதுநகரில் பாண்டியன் நகர் அல்லம்பட்டி சூலக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலையில் பெய்த மிதமான மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை
விருதுநகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக இன்று மாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மிதமான மழையால் நகர் பகுதியில் வெப்பம் நீங்கி குளிர்ந்து சீதோஷ்ண நிலை நிலவியது நகரில் ரயில்வே பீடர் ரோடு பாவாலி ரோடு பழைய பேருந்து நிலையம் வடக்கு பகுதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.