சிங்கம்புனரி: சிங்கம்புணரி தாலுகாவில் திமுகவை வீழ்த்த நூதன முறையில் களம் இறங்கிய அதிமுகவினர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் திமுகவை வீழ்த்த அதிமுகவினர் நூதன முறையில் களமிறங்கி, வீடு வீடாகவும் வயல்வெளிகளுக்கும் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி, நீட் விலக்கு, கல்விக்கடன் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட திமுக வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என மக்களிடம் விளக்கி வாக்கு சேகரிக்கின்றனர். இது திமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.