திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி மண்டலம் மூன்றில் 16 வது வார்டில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சந்தப்பேட்டை மலையின் மீது மாநகராட்சி பொது நிதியிலிருந்து 12.20 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடத்தை மாமன்ற உறுப்பினர் மதிவாணன் ஏற்பாட்டில் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.