குளித்தலை: பனையூர், நெய்தலூர் காலனி, முதலைப்பட்டி, தளிஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் தீவிர வாக்கு சேகரிப்பு
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி தோகைமலை ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களின் கல்வி மேம்பட இலவச லேப்டாப், ஏழை எளிய மக்களுக்கு இலவச ஆடு மாடுகளை வழங்கினார். எனக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.