வேடசந்தூர்: ஆத்துமேட்டில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
வேடசந்தூர் ஆத்துமேட்டில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சியின் மூலம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். வேடசந்தூர் தொகுதி பொறுப்பாளர் திருமுருகன் முன்னிலை வகித்தார். வேடசந்தூர் பேரூர் செயலாளர் பால்ராஜ் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சுதீஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தனபால் முன்னாள் மேற்கு மாவட்ட பொருளாளர் பெருமாள் வேடசந்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.