ஒட்டன்சத்திரம் கிராமப்புற பகுதிகளில் 100 நாள் வேலை இனிமேல் இல்லை என கூறி ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் கே பாலு தலைமையில் ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. ஏராளமான திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொறுப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், பாக முகவர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.