பொன்னேரி: பொன்னேரியில் புத்தக கண்காட்சியை சார் ஆட்சியர் ரவிகுமார் தொடங்கி வைத்தார்.
54-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு பொன்னேரியில் உள்ள முழு நேர நூலகத்தில் புத்தக கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது.இதனை பொன்னேரி சார் ஆட்சியர் ரவிகுமார் குத்து விளக்கேற்றி இன்று தொடங்கி வைத்தனர்.இந்த கண்காட்சியில் அரசியல், அறிவியல்,தமிழ், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள், குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்களும், போட்டி தேர்வுகளுக்கு பயன்படும் புத்தகங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.முதல் நாளிலேயே மாணவர்கள், பொது மக்கள் என திரளானோர் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனர்