நத்தம் அருகே சமுத்திரப்பட்டி பேருந்து நிறுத்தம் முன்பாக திமுக நத்தம் மத்திய ஒன்றிய செயலாளர் சேக்சிக்கந்தர் பாட்சா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மகாத்மா காந்தியினுடைய பெயரை மறைக்கக்கூடிய வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும், இந்த புதிய சட்ட மசோதாவில் பல குளறுபடிகளும் மாநில அரசு மீது நிதிச்சுமையை ஏற்றக்கூடிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக தெரிவித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது