சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இரண்டு வாரங்களாக மழையின்றி வறண்ட வானிலை நிலவியது. இன்று மாலை மேகமூட்டத்துடன் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன. கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.