ஆவடி: பூந்தமல்லி காவல் நிலையம் அருகே காலை 8:00 மணிக்கே ஜோராக நடைபெறும் மதுபானம் விற்பனை
பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ள ஆர் கே ஒயின்ஷாப் மதுபான கடையிலும் பூந்தமல்லி காவல் நிலையம் அருகே உள்ள ஹைடெக் மதுபான கடையில் அரசு விதிமுறை மீறி காலை 8 மணிக்கு கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கப்பட்டு வருகின்றது, பாட்டில் ஒன்றுக்கு 60 முதல் 80 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது இதனால் தின கூலி செல்லும் மக்கள் மதுவுக்கு அடிமையாகி வாழ்வதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது