அருப்புக்கோட்டை: அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா பறவை காவடி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் பக்தி பரவசம்.
அருப்புக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பங்குனி பொங்கல் விழாவின் முக்கிய திருவிழாவான அக்னி சட்டி திருவிழா நேற்று தொடங்கி இன்று அதிகாலை வரை வெகு விமர்சியாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், பறவை காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.