தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கார் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 100 கிலோ கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்து, அதனை இலங்கைக்கு கடத்துவதற்காக மற்றொரு கும்பலுக்கு கைமாற்றி விடுவதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.