திருவொற்றியூர்: திருவொற்றியூர் தேரடி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு பகுதி சார்பாக ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
திருவொற்றியூர் தேரடி பகுதியில் திமுக கிழக்கு பகுதி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நல திட்டம் மற்றும் ஏழை எளியவர்களுக்கு ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது இதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ .ராசா வழங்கினார் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்எல்ஏ, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர்,வட்டச் செயலாளர் திமுக மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மண்டல குழு தலைவர் தனியரசு செய்திருந்தார்.