திருவள்ளூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
பொதுமக்கள் 444 கோரிக்கை மனுகளுக்கு தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்திரவிட்டார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றதுதங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 444 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கினர். இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டார்