நல்லம்பள்ளி: தட்சண காசி காலபைவர் கோயிலில்
கால பைரவர் ஜெயந்தி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது
அதியமான்கோட்டையில் உள்ளது தட்சண காசி காலபைரவர் கோயில். மன்னர் அதியமானால் கட்டப்பட்ட காலபைரவருக்கான தனி கோயில் இதுவாகும். இங்கு தேய்பிறை அஷ்டமி அன்று தமிழகத்தின், பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காலபைரவரை வழிபடவும், தங்களது நேர்த்தி கடனை செலுத்த வந்து செல்கின்றனர். மேலும், சாம்பல் பூசணி, தேங்காய் உள்ளிட்டவற்றில் தீபம் ஏற்றி காலபைரவரை வழிபடுகின்றனர்.