வண்டலூர்: நந்திவரம் காலனியில் ₹8 லட்சம் செலவில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை
நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட நந்திவரம் காலனி பகுதியில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது. பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிக்கு காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் நகர் மன்ற தலைவர் கார்த்திக், நகராட்சி ஆணையர் தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்று பணியை பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தனர்.