நிலக்கோட்டை: விளாம்பட்டியில் காதலித்த பெண்ணின் தந்தை செருப்பால் அடித்ததாக, இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை - உறவினர்கள் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த, விளாம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் ராஜதுரை (23) தேங்காய் வெட்டும் கூலி தொழிலாளியான இவர், இதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த சில நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை கடந்த இளைஞர் ராஜதுரையை செருப்பால் அடித்து தன் மகளிடம் பேச கூடாது என, கண்டித்ததாக கூறப்படுகிறது. ராஜதுரை தங்களது வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் ஒரு அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.