குளித்தலை: காவல்காரன்பட்டியில் நடந்த வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ₹71,000 பறிமுதல்
தேர்தல் பறக்கும் படை குழு காவல்காரன்பட்டி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், குள்ளம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ₹71,000ஐ பறிமுதல் செய்து, குளித்தலை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.