வத்தலகுண்டு அருகே பங்களாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் ஜோஷி (23) கட்டிட பொறியாளரான இவர் வத்தலகுண்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார் நிலக்கோட்டை சாலையில் மல்லனம்பட்டி என்ற இடத்தில் அவர் இருசக்கர வாகனத்தில் கொண்டுவந்த போது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பொறியாளர் மனோகர் ஜோஷி படுகாயத்துடன் நிகழ்விடத்தில் உயிரிழந்தார்