வேடசந்தூர்: ஆத்துமேட்டில் வ உ சி உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மரியாதை
வேடசந்தூர் ஆத்துமேட்டில் வ உ சி மக்கள் இயக்கம் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ உ சி அவர்களின் 89 ஆவது குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மேடையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அனைத்து கட்சியினர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. வேடசந்தூர் பஸ் நிலையம் முன்பாக இருந்து வெடிகள் வெடித்து தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக ஆத்து மேடு வந்தடைந்தனர். பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.