கடவூர்: தரகம்பட்டியில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்து போலீசார் மற்றும் துணை ராணுவ படையின் கொடி அணிவகுப்பு பேரணி
Kadavur, Karur | Apr 9, 2024 பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்து போலீசார் மற்றும் துணை ராணுவப்படையின் கொடி அணிவகுப்பு தரகம்பட்டியில் நடைபெற்றது. குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமை ஏற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தரகம்பட்டி கடைவீதி, பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் வளாகம் வரை சென்று முடிவடைந்தது. இதே போல் வீரணம்பட்டியிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.