காஞ்சிபுரம்: பழைய ரயில்வே சாலையில் முன்னாள் அமைச்சரின் பிறந்த நாளை ஒட்டி திருவுருவப்படத்திற்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை செய்தார்
பேரறிஞர் அண்ணாவின் தம்பியாய், முத்தமிழ் அறிஞரின் உற்ற நண்பராய் விளங்கிய செந்தமிழ் செல்வர் முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் 109 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்களின் இல்லத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்,முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.