திருப்பூர் வடக்கு: திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் என குற்றம் சாட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகராட்சி தலைவர் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இதில் வார்டு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி நகர் மன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது