வேடசந்தூர்: BVM பள்ளி முன்பாக பழமையான புளியமரம் சாய்ந்தது
வேடசந்தூரில் இருந்து வடமதுரை செல்லும் சாலையில் பி வி எம் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் முன்பாக பழமை வாய்ந்த புளியமரம் இருந்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தால் புளியமரம் வேரோடு சாய்ந்து பள்ளியின் கேட்டின் மீது விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பள்ளியின் கேட் மற்றும் காம்பவுண்ட் சுவர் சேதம் அடைந்தது. தகவல் அறிந்த பள்ளியின் உரிமையாளர் ராஜா சம்பவ இடத்திற்கு வந்து இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.