சிங்கம்புனரி: பப்ளிக் செய்தி எதிரொலி புல்டாங்குட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வெடித்த போராட்டம்-மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, எஸ்.புதூர் ஒன்றியத்தில், கோணம்பட்டி அருகே புல்டாங்குட்டு மலைக்குன்றில் திருச்சி மாவட்டத்திற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.6.53 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று நேரில் ஆய்வு செய்து, பணிகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டு, அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.