ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தங்கச்சி அம்மாபட்டி ஊராட்சி இடும்பன் குடும்பபட்டியில் தமிழகத்தின் துணை முதலமைச்சரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் சக்கரபாணி தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பொதுமக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் கே பாலு முன்னிலை வகித்தார்.