நத்தம்: நத்தம் பகுதியில் புதன்கிழமை மின்தடை
நத்தம் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம் பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன் தகவல்