வேடசந்தூர்: அய்யலூரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்
தமிழ்நாட்டில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் மூலம் SIR வாக்காளர் திருத்த பிரச்சார விழிப்புணர்வு தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அய்யலூர் பேரூராட்சி மூலம் இன்று SIR வாக்காளர் திருத்த பிரச்சார விழிப்புணர்வு அய்யலூர் பேருந்து நிறுத்தம் மற்றும் கடைவீதி பகுதிகளில் நடைபெற்றது. இதில் அய்யலூர் பேரூராட்சி செயல் அலுவலர் பத்மலதா, வட்டாட்சியர் மணிமொழி, வருவாய் அலுவலர் சண்முகப்பிரியன், கிராம நிர்வாக அலுவலர் செல்லமுத்து, கிராம உதவியாளர் திருநாவுக்கரசு மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.