பொன்னேரி: கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை கழிவுகளால் சாக்கடையாக மாறிய தாமரை ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மக்களின் நீராதாரமான தாமரை ஏரியில் சிப்காட் கழிவுகள் விடப்பட்டு சாக்கடையாக மாறிய ஏரியில் எண்ணெய் படலங்கள் ஏற்பட்டு, அந்த பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தாமரை ஏரியை பாதுகாக்க கோரி அந்த பகுதி மக்கள் மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டனர். மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கும்மிடிப்பூண்டி பஜாரில் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.