திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலில் கோவில் பெருந்திட்ட வளாகப் பணி கிரி பிரகார பாதைப்பணி முழுமையாக நிறைவு
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் துவங்கின. இந்தப் பணிகளில் 90 சதவீத பணிகள் தற்பொழுது நிறைவடைந்துள்ளது. ஒரு சில பணிகள் மட்டுமே இன்னும் முடிவடையவில்லை. குறிப்பாக கோவிலை சுற்றி வரும் கிரி பிரகார பாதைப்பணி முழுமையாக நிறைவடைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.