கொடைக்கானல்: கொடைக்கானலில் அரசால் அனுமதிக்கப்படாத வன அருவிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல கலெக்டர் தடை விதித்துள்ள நிலையில் மேலும் ஒரு அருவிக்கும் செல்ல தடை
கொடைக்கானல் வில்பட்டி பேத்துப்பாறை அஞ்சு வீடு அருவியில் 10-க்கு மேற்பட்டோர் பலியான நிலையில் அக்டோபர் 18-ல் பொள்ளாச்சியைச் சேர்ந்த மருத்துவக் கல்லுாரி மாணவர் பலியானார். அதன்பின் அந்த அருவிக்கு செல்ல தடை. இந்நிலையில் போலுார் புலவிச்சாறு அருவிக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. இங்கு சென்று பார்வையிட, குளிக்க முற்படும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது