திண்டுக்கல் கிழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திரா வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் நடத்திய சோதனை 7 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு
திண்டுக்கல், ஆர்.எம் காலனி, வள்ளலார் நகர் பகுதியில் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீடு உள்ளது. இங்கு, நேற்று மதியம் 2.00 மணி முதல் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (Directorate General of GST Intelligence (DGGI) சோதனை செய்தனர். இந்த சோதனையில் பெண் அதிகாரி உட்பட 4 அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில் சரியாக இரவு 9.00 மணியளவில் அமைச்சர் மகள் இந்திரா வீட்டில் நடைபெற்ற சோதனை முடிவடைந்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (DGGI) மூன்று பைகளில் ஆவணங்களுடன் வெளியே வந்து இரண்டு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.