வண்டலூர்: வண்டலூர் - சிங்கபெருமாள் கோவில் இடையே GST சாலையில் 7 நடை மேம்பாலங்கள் கட்ட டெண்டர் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்
வண்டலூர் - சிங்கபெருமாள் கோவில் இடையே ஜிஎஸ்டி சாலையில் சுமார் ₹20 கோடி செலவில் 7 நடை மேம்பாலங்கள் கட்ட டெண்டர் கோரப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், ரயில் பயணிகள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் தேசிய நெடுஞ்சாலையை பாதுகாப்பாக கடக்க இது உதவியாக இருக்கும். வண்டலூர் இரணியம்மன் கோவில், சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்கள், தைலாவரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி, தகவல் தொழில்நுட்ப பூங்கா, மறைமலை அடிகள் நகர் ஆகிய இடங்களில் இந்த நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. கட்டுமான பணி 6 மாதங்களில் முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.