துறையூர்: துறையூரில் ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய அதிமுகவினர் - ஓட்டுநர், பெண் உதவியாளர் அரசு மருத்துவமனையில் அனுமதி
திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையப் பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" எனும் பயணம் மேற்கொள்வதற்காக ஆயிரக்கனக்கானோர் காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸை வழிமறித்து அதிமுகவினர் தாக்கினர்