நிலக்கோட்டை: கணவாய் பட்டி ஃபர்ஸ்ட் ஸ்டெப் பள்ளியில் ஓட்டு போட்டு தலைவர்களை தேர்ந்தெடுத்த மாணவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கணவாய் பட்டி ஃபர்ஸ்ட் ஸ்டெப் பள்ளியில் மாணவர் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தேர்தலில் போட்டியிட்டனர். மூன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாக்களித்து பள்ளி தலைவர், விளையாட்டு, கலாச்சாரம் உள்ளிட்டவர்களை தேர்ந்தெடுத்தனர்.