பொன்னேரி: கும்மிடிப்பூண்டியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு நீர், திருமழிசை பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு விடப்படுகிறது. கும்மிடிப்பூண்டி பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி கழிவுநீர் லாரிகளை சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி லாரிகளின் டயர்களில் இருந்து காற்றை இறக்கி நூதன முறையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்