வேடசந்தூர், டிச.13- ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றியத்தின் சார்பில் எனது வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என வாக்குச்சாவடி முகவர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கேதையுரும்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் கே பாலு தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் தொகுதி பொறுப்பாளர் பரணிமணி முன்னிலை வகித்தார். ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி, மத்திய ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் சிவபாக்கியம்ராமசாமி, முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.