அருப்புக்கோட்டை: கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள போலீசார் தபால் வாக்கு பதிவு செய்யும் பணி துவங்கியது
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பணிபுரியும் போலீசார் 299 பேர் தபால் வாக்கு அளிப்பதற்காக இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு முன்னிலையில் நடைபெற்ற இந்த தபால் வாக்குப்பதிவில் காலை முதலே போலீசார் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்குப்பெட்டியில் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர்.