கொடைக்கானல்: பூம்பாறை மலைப்பாதையில் தொடரும் ரீல்ஸ் மோகம் - காட்டு மாட்டை வம்புழுக்கும் இளைஞர்
வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியில் சில இளைஞர்கள் காட்டுமாடு அச்சுறுத்தும் வகையிலும் ரீல்ஸ் மோகத்தால் தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் படுத்து இருக்கும் காட்டு மாட்டை சீண்டும் வகையில் வீடியோ எடுத்து பூம்பாறை என்ற இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரீல்ஸ் மோகத்தால் இவ்வாறு செயல்படும் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.