உத்திரமேரூர் ஒன்றியம் காவித்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட காவூர் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த கிராமத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சர்வ சேவா தொண்டு நிறுவன அமைப்பு நடத்தி வந்த தொடக்கப்பள்ளி மூடப்பட்ட நிலையில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் தொடக்க கல்வியை கற்க சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது. இதனால், காவூர் கிராமத்திற்கு அரசு தொடக்கப்பள்ளி கொண்டு வர வேண்டும் எ