திண்டுக்கல் கிழக்கு: மேட்டுப்பட்டியில் முதியவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது
மேட்டுப்பட்டியை சேர்ந்த சவேரியார் மகன் ரத்தினபோஸ் சர்ச் அருகே நடந்து சென்ற போது தளபதி, பிரவீன்லியாஸ் ஆகிய 2 பேர் அவ்வழியாக செல்வோரை அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசியதற்கு ரத்தினபோஸ் எதற்கு வயதானவர்களை இவ்வாறு பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு இருவரும் ரத்தினபோசை அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசி இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தளபதி, பிரவீன்லியாஸ் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்