திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஒன்றியம், குடகிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மணப்புளிக்காடு பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட குடும்பங்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாகியும் சாலை வசதியும், மேம்பால வசதியும் செய்து தரப்படாததைக் கண்டித்து, முதலமைச்சரின் தனிப்பிரிவு,ஊராட்சி நிர்வாகம்,ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாபெரும் மக்கள் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.