நத்தம்: நத்தத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து விழிப்புணர்வு பேரணி
நத்தம் அவுட்டரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை நத்தம் தாசில்தார் ஆறுமுகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணையின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி வந்தனர். விழிப்புணர்வு பேரணியானது அவுட்டரில் இருந்து புறப்பட்டு காந்திஜி கலையரங்கம், நத்தம் ரவுண்டானா, மீனாட்சிபுரம், திண்டுக்கல் மெயின் ரோடு வழியாக நத்தம் யூனியன் அலுவலகம் சென்றடைந்தது.