ஆவடி: அண்ணனூரில் மின் கம்பத்திற்காக சாகுந்தலம் என எழுத்தப்பட்டுள்ள தெரு பெயரால் மக்கள் அதிர்ச்சி
ஆவடி அடுத்த அண்ணனூர், 32 வது வார்டு, சகுந்தலா தெருவில் மின் கம்பம் ஒன்று, சிமெண்ட் உதிர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. மின் கம்பம் ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்தினாலும், அதன் அருகே எழுத்துப்பட்டுள்ள வாசகம் தான் பொதுமக்களிடையே 'அதிர வைக்கிறது. சகுந்தலா தெரு என்பதை 'சாகுந்தலம்' என எழுதுவதில் பிழை ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் அது எழுதப்பட்ட இடம் தான் அனைவரையும் ; அதிர்ச்சியையும், சங்கடப்படவும் வைத்துள்ளது.