ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சி ஐ டி யு தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு
சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிலாளர்கள் 27 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டு , ஆறு மாத காலமாகியும் நிர்வாகம் பணி வழங்காமல் தொழிலாளர் விரோத போக்கை மேற்கொள்ளவதை கண்டித்து , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள இருந்த 27 தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு சங்கத்தினர் என 32 பேர் கைது செய்யப்பட்டனர் கைது செய்ய முற்பட்டபோது இரு தரப்பினருக்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது