குளித்தலை: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, தலைமை அஞ்சலகம் முன்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
குளித்தலை தலைமை அஞ்சலக அலுவலகம் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை அஞ்சலக அதிகாரி ஜாஸ்மின் பிரியா தலைமை வகித்தார். வட்டாட்சியர் சுரேஷ், அஞ்சலக ஆய்வாளர் ஸ்டாலின், உதவி அஞ்சலக அதிகாரி குப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அஞ்சல் அலுவலகத்தை வந்தடைந்தது.