அருப்புக்கோட்டை: பந்தல்குடியிலுள்ள வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியைச் சேர்ந்தவர் பீட்டர் ஆரோக்கியசாமி. இந்நிலையில் பீட்டர் ஆரோக்கியசாமி வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றபோது திடீரென அவரது வீட்டில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை அடுத்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தண்ணீரைப் பீச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீவிபத்தில் வீட்டிலிருந்த பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், ஆவணங்கள் எரிந்து நாசம் ஆகின. இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.